×

முதுமலை வனப்பகுதியில் சாலையோரம் உலா வந்த புலி: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

கூடலூர்: முதுமலை வனப்பகுதியில் சாலையோரம் உலா வந்த புலியை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்ததோடு, அதனை செல்போனில் படம் பிடித்தனர். இக்காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக ஊட்டி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாள்தோறும் வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் வனவிலங்குகளை ஆர்வத்துடன் கண்டு செல்வதும் வழக்கமாக உள்ளது.

தற்போது மழை பெய்து வனப்பகுதி முழுவதும் பசுமையாக உள்ள சூழ்நிலையில் மான்கள், யானைகள், புலிகள் போன்ற வனவிலங்குகளை அதிக அளவில் சாலையோரங்களில் காண முடிகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல சுற்றுலா பயணிகள் வாகனம் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது அபயாரண்யம் பகுதியில் சாலையை ஒட்டிய வனப்பகுதியில் ஒரு புலி கம்பீரமாக சுற்றுலா வாகனங்களை கண்டு கொள்ளாமல் நீண்ட தூரம் நடந்து சென்றுள்ளது. புலி நடந்து செல்லும் காட்சியினை சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போனில் பதிவு செய்து வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post முதுமலை வனப்பகுதியில் சாலையோரம் உலா வந்த புலி: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Mudumalai Forest ,Cuddalore ,Mutumalai forest ,Tiger ,Dinakaran ,
× RELATED கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கனமழை..!!